சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று அபாயம்

காவேரிப்பட்டணம், ஜன.13: காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சியின் முக்கிய சாலையான 11வது வார்டில் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், நகை கடைகள் என 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வார்டில் கடந்த ஒரு மாதமாக சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த சாலையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>