திமுக செயற்குழு கூட்டம்

பென்னாகரம், ஜன.13: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,கெரகோடஅள்ளியில், வரும் 18ம் தேதி காலை 9மணியவில், மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மு.க.ஸ்டாலின் வருகை குறித்தும், அவர் பங்கேற்கும் மக்கள் கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது குறித்தும் கலந்தாலோசிக்க, தர்மபுரி மேற்கு மாவட்ட  செயற்குழு கூட்டம் இன்று 13ம் தேதி காலை 10மணிக்கு, காரிமங்கலம் ஒன்றியம், கெரகோடஅள்ளி தளபதி அரங்கில் நடைபெற உள்ளது. இதில், தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் அளவிலான அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், தொ.மு.ச. மற்றும் அதனை சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்க ேவண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>