ஏரியில் மூழ்கி மீனவர் பலி

பொன்னேரி: பழவேற்காடு அருகே அவுரிவாக்கம் கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி(54). மீனவர். இவரது நண்பர்களான சீராளன், ராஜேஷ் ஆகியோருடன்  பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது சிகாமணி, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி வலையில் சிக்கி மாட்டிக்கொண்டார். உடன் இருந்த மீனவர்கள் அவரை வலையிலிருந்து மீட்பதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் திருப்பாலைவனம் போலீசார், வருவாய் மற்றும் மீன்வளத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>