சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூர்: பூண்டி பேருந்து நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா, துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் கிராமிய மணம் வீசும் மண் பானையில், பொங்கல் வைத்து, தமிழரின் பாரம்பரியமான பறை வாயிலாக தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Related Stories:

>