பிரபல கஞ்சா வியாபாரி கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த  பட்டரைவாக்கம் கிராமத்தில், சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கும், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் விற்பனை செய்வதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாலிபர், சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது, சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், பிரபல கஞ்சா வியாபாரி வினோத் (34) என தெரிந்தது. அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>