கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு

திருவெறும்பூர், ஜன. 13: காவிரி டெல்டாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியாற்றில் கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் முழுவதும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி டெல்டாவில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி மற்றும் ஒருபோக நெற்பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் காவிரியில் கல்லணைக்கு வினாடிக்கு 3,509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதை பொதுப்பணித்துறையினர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆறுகளில் திறக்காமல் ஒட்டுமொத்தமாக கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை திறந்து விட்டனர். இந்த தண்ணீர், வீராணம் ஏரிக்கு சென்றடையும்.

Related Stories:

>