வீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது

தா.பேட்டை, ஜன. 13: தா.பேட்டை அருகே உள்ள காருகுடியை சேர்ந்தவர் கலாவதி (48). இவர் தோழி ஒருவருடன் கருப்பம்பட்டி சாலையில் நேற்று நடைபயிற்சி சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது சாலையோரத்தில் பைக்கை ரிப்பேர் செய்வது போல் நின்ற 3 வாலிபர்களில் ஒருவன் திடீரென கலாவதியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டேகால் பவுன் செயினை பறித்தான். பின்னர் பைக்கில் 3 பேரும் தப்பினர். அப்போது செல்லும் வழியில் இருந்த வேகத்தடை மீது பைக் ஏறியபோது ஏற்பட்ட தடுமாற்றத்தால் எதிரே வந்த பைக் மீது மர்மநபர்கள் சென்ற பைக் மோதியது. இதில் 3 வாலிபர்களும் கீழே விழுந்தனர். பின்னர் பொதுமக்கள் அருகே வருவதை பார்த்ததும் வாலிபர்கள் பைக்கை அங்கேயே விட்டு விட்டு தப்பினர். இதையடுத்து பைக்கிலிருந்து கீழே விழுந்து தப்பியது செயினை பறித்து சென்ற வாலிபர்கள் என்ற தகவல் பரவியது. இதுகுறித்து தா.பேட்டை போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காருகுடி, கருப்பம்பட்டி உள்ளிட்ட பகுதியில் குற்ற தடுப்பு தனிப்படை போலீசார் 10 பேரும், இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வயலில் பதுங்கியிருந்த வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து வாலிபர்களை விரட்டி சென்று போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில், ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் தினகரன் (23), பச்சபெருமாள்பட்டி வடிவேல் மகன் வல்லரசு (19) மற்றும் பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த மைனர் வாலிபர் ஒருவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கலாவதியிடம் செயினை பறித்து ஒரு மரத்தடியின்கீழ் புதைத்து வைத்திருப்பதாக 3 பேரும் தெரிவித்தனர். இதையடுத்து வாலிபர்களை அழைத்து சென்று செயினை மீட்டதுடன் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பைக்கை பறிமுதல் செய்தனர். செயினை பறித்த வாலிபர்களை 4 மணி நேரத்தில் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

Related Stories: