கலெக்டர் ஆய்வு சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

மன்னார்குடி, ஜன.13: மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா தாளாளர் திவாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அமுதா முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த சமத்துவ பொங்கல் விழாவை கல்லூரி தாளாளர் திவாகரன், கல்லூரி முதல்வர் அமுதா ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், ஒவ்வொரு துறை சார்பில் மாணவிகள் சமைத்த பொங்கலை சூரிய பகவானுக்கு படைக்கும் விதத்தில் தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் கற்பூரம் ஏந்தி பூஜை செய்தனர். நிகழ்ச்சியில், துணை முதல்வர்கள் உமாமகேஸ்வரி, அனுராதா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>