×

தொழிலாளர் நல உதவி ஆணையர் தகவல் போகி பண்டிகையான இன்று பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும்

திருவாரூர், ஜன.13: திருவாரூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது பழைய பொருட்களாக பிளாஸ்டிக் மற்றும் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர்கள், டியூப்கள் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றினை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்கள் காரணமாக மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களும் உண்டாகிறது. போகிப் பண்டிகையான இன்று திருவாரூர் மாவட்டத்தில் பழைய பொருட்களாக பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Boogie Festival ,
× RELATED போகி பண்டிகை..! ரப்பர், பழைய டயர்,...