கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

கும்பகோணம், ஜன.12: கும்பகோணம் அடுத்த திருபுவனத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததின்படி திருவிடைமருதூர் தாலுகா பகுதியில் மொத்தம் ஆயிரத்து 66 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பொங்கல் பரிசுப்பை மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி, பெண் தொழிலாளர்களுக்கு சேலை ஆகியவைகளை கும்பகோணம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ராஜராஜன், உதவி ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

Related Stories:

>