தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

தஞ்சை, ஜன.12: தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லரை மதுபான விற்பனை கடைகள் 3 நாட்கள் மூடப்படுகிறது. வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், வரும் 26ம் தேதி குடியரசு தினம், வரும் 28ம் தேதி வள்ளலார் நினைவு தினத்தையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் கூடிய மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படாது என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>