கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தஞ்சை, ஜன.12: கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருவாய்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அன்பு (30). இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணங்களின் அடிப்படையில் அன்புவை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து அன்பு குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் பட்டுக்கோட்டை வட்டம் சொக்கநாதபுரம் கீழபூவாணம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(40). இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தாராம். இதையடுத்து எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் உஷா தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின்படி முருகேசனை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து முருகேசன் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: