×

அரிமளத்தில் ரூ.10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருமயம்,ஜன.13: அரிமளம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள மேல்நிலைப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் எம்எல்ஏ ரகுபதி கலந்து கொண்டு பேசும் போது, தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு குழப்பங்களுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று முடிவுகட்டும். மக்களிடையே சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டும் ஒரே கட்சி திமுக தான் என்றார். இதனைத் தொடர்ந்து சமுத்திரம் ஊராட்சி தாஞ்சூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ரகுபதி திறந்து வைத்தார். இதில் அரிமளம் ஒன்றிய செயலாளர் பொன் ராமலிங்கம், ஒன்றிய குழு தலைவர் மேகலா முத்து, மாவட்ட கவுன்சிலர் கலைவாணி, தொழில் நுட்ப அணி இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : drinking water treatment plant ,Arimala ,
× RELATED மடத்துக்குளம் அரசு...