×

எம்எல்ஏ ரகுபதி திறந்து வைத்தார் பொன்னமராவதி பகுதியில் மழை மக்கள் கூட்டமின்றி பொங்கல் சந்தை

பொன்னமராவதி,ஜன.13: பொன்னமராவதி பொங்கல் சந்தையில் தொடர் மழையினால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட மிக குறைவாகவே இருந்தது. பொன்னமராவதி பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழைபெய்யவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓர் ஆண்டாக கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லை. இப்போது தொடர் சாரல் மழை பெய்து வருகின்றது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் விழா இப்பகுதியில் களைஇழந்து காணப்படுகின்றது. பொன்னமராவதி பொங்கல் சந்தை என்றால் நகரில் விளக்கக்கூட முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். ஆனால் நேற்றைய பொங்கல் சந்தையில் குறைவான கூட்டமே காணப்பட்டது. இருந்த போதும் அண்ணாசாலை கூட்டமாகவே காணப்பட்டது. கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் வாங்க குறைவான கூட்டம் இருந்தது. காய்கறிகளும் வரத்து குறைவாகதான் இருந்தது. கோலப்பொடிகள் விற்பனை அமோகமாக நடந்தது. அண்ணாசாலை மெயின்ரோட்டில் கூட்டம் இல்லாமல் இருந்தது. பொன்னமராவதியில் பொங்கல் சந்தை சாதாரண சந்தையைவிட குறைவான கூட்டமே காணப்பட்டது.

மழை அளவு
புதுக்கோட்டையில் 88.70 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆலங்குடியில்40.80 மிமீ மழையும்,கந்தர்வகோட்டையில் 30.30 மிமீ மழையும், கறம்பக்குடி 93.60 மிமீ மழையும், திருமயம் 85 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. அறந்தாங்கியில் 243 மிமீ மழையும், ஆவுடையார்கோவில் பகுதியில் 120 மிமீ, மணமேல்குடியில் 90 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இலுப்பூர் 69, விராலிமலை 23.80, பதிவாகியுள்ளது.

Tags : MLA Raghupathi ,area ,Pongal ,Ponnamaravathi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...