×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 37,942 கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்


இலுப்பூர், ஜன. 13: இலுப்பூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இலுப்பூர் சமுதாயக் கூடத்தில் தொழிலாளர் துறையின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதிகளை சேர்ந்த 6,959 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை துவக்கி வைத்தார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பானது புதுக்கோட்டை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் 6,306 பயனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது, அறந்தாங்கி தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் 2,787 பயனாளிகளுக்கும், குளத்தூர் அரசு ஆண்கள் பள்ளியில் 7,272 பயனாளிகளுக்கும், ஆலங்குடி மங்களம் மஹாலில் 4,623 பயனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது,

கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3,766 பயனாளிகளுக்கும், திருமயம் என்.எஸ்.ஆர் மளிகை பெருமாள் கோவில் வீதியில் 5,087 பயனாளிகளுக்கும், பொன்னமராவதி வர்த்தக சங்க கட்டிடத்தில் 1,142 பயனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 37,942 பயனாளிகளுக்கு ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சின்னதம்பி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) முருகேசன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் (திருச்சி மண்டலம்) பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : construction workers ,Pudukkottai district ,
× RELATED கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கல்