×

மயிலாடுதுறை நகரில் சாலையில் தொடர்ந்து ஏற்படும் மெகா பள்ளம்

மயிலாடுதுறை, ஜன.13: மயிலாடுதுறை நகரின் துயரம் பாதாள சாக்கடை திட்டம் என நிலைமை மாறிவருகிறது, 10 ஆண்டுகளாக மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வந்தாலும் கடந்த 2 ஆண்டு காலமாக நகரின் பல்வேறு இடங்களில் ஆள்நுழைவு தொட்டியிலிருந்து கழிவுநீர் வெளியேறுவதும் அவைகள் வழிந்தோடி மழைநீர் வடிகாலில் செல்வதும், குளம் குட்டைகளை நிரப்புவதும், சாலை மற்றும் வீதிகளில் பொதுமக்கள் செல்லமுடியாத அளவிற்கு மோசமாகி வந்த நிலையில் சாலைகளில் திடீர் பள்ளம் ஏற்பட்ட வருகிறது.

தரங்கை சாலை, கண்ணார தெரு, கச்சேரி சாலை போன்ற பகுதிகளில் மட்டும் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு வந்தது. தற்பொழுது மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் சாலை சந்திப்பில் கால்டெக்ஸ் பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது, இந்த பள்ளத்தால் கழிவுநீர் செல்லும் பாதை அடைப்பு ஏற்பட்டுள்ளது, மழை நேரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இந்த பள்ளத்தை சரிசெய்ய ஆரம்பித்தால் எந்தசாலையின் போக்குவரத்து மாற்றப்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Tags : road ,Mayiladuthurai ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி