300 பேர் கைது கோயில்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனைக்கு அனுமதிக்க வேண்டும் சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் வலியுறுத்தல்

காரைக்கால்,ஜன.13: கோயில்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் கூட்டம் திருநள்ளாறு தியாகராஜ மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் உடைய தலைவர் சிவ பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமை வகித்தார். மாநிலத்தின் செயலாளர் சிவ அர்தனாரி சிவாச்சாரியார், சிவ சிவராம சிவாச்சாரியார் ஆகியோர் இன்றைய சூழலில் பக்தர்கள் வருகை, ஆலய திருவிழாக்கள் ரத்து, ஆதி சைவ சிவாச்சாரியார்களின் ஜீவாதார பாதிப்பு குறித்து பேசினர். பொருளாளர் சிவ  கீதாராம சிவாச்சாரியார் சங்கத்தின் நிதி அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துணைத் தலைவர் சிவ ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் கலந்து கொண்டு பேசினார். ஆகம விதிகளை பின்பற்றி ஆலய பூஜைகளை குறைவின்றி நடத்திட வலியுறுத்தி மாநில துணை தலைவர் சிவ திருஞானசம்பந்த சிவாச்சாரியார் மற்றும் மாவட்ட இணைச்செயலர் ஹரிஹர சிவாச்சாரியார் பேசினர்.

கூட்டத்தில், ஆலய பூஜை நடைபெற்றாலும் நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடியாமல் பல தடைகள் இருப்பது அனைவர் மத்தியிலும் வருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும். சாதாரண மாக தீபம் ஏற்றுதல் மற்றும் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்தல் ஆகியவற்றில் உள்ள தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்ய அனுமதிக்க மாநில, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆலயங்கள் 12 ஆண்டுகள் கடந்தும் திருப்பணிகள் துவங்கப்படாமலும் திருப்பணிகள் நிறைவு பெற்ற ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் தேதி நிர்ணயம் செய்யப்படாமலும் உள்ளது. அனைத்து சைவ வைஷ்ணவ ஆலயங்களின் கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாள்காட்டி மாத காட்டி காலண்டர் மற்றும் சார்வரி ஆண்டு பஞ்சாங்கக் குறிப்புகள் அடங்கிய டைரி உறுப்பினர்களுக்கு வழங்கும் பொருட்டு நிர்வாகிகள் வெளியிட்டனர். ரமேஷ் சிவாச்சாரியார் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.

Related Stories: