பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் கமிஷன் மண்டியில் பூவன் ரக பழங்கள் கூடுதல் விலைக்கு ஏலம்

கரூர், ஜன. 13: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வாழைத்தார் கமிஷன் மண்டியில் பூவன் வகை ரகங்கள் கூடுதல் விலைக்கு ஏலம் விடப்பட்டன. பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படவுள்ளன. இதனை முன்னிட்டு, கரூர் ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் உள்ள வாழைத்தார் கமிஷன் மண்டிக்கு நேற்று அதிகளவு வாழைத்தார்கள் ஏலத்துக்கு வந்தன.பண்டிகை நாட்கள் என்பதால் பூவன் ரக தார்கள் நேற்று வழக்கத்தை விட அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டன. ஒரு தார் ரூ.550 என்ற விலையில் ஏலம் விடப்பட்டன. பண்டிகையின் போது விற்பனை மற்றும் தேவை அதிகம் என்பதால் வியாபாரிகளும் இதனை ஏலம் எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>