ஆலய வழிபாட்டு பயிற்சி முகாமில் கிராம கோயில் பூசாரிகளுக்கு வாய்ப்பு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

க.பரமத்தி, ஜன.13: ஆலய வழிபாட்டு பயிற்சி முகாமிற்கு அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில் பூசாரிகளுக்கு வாய்ப்பு அளிக்குமாறு அரசை கேட்டுகொள்வது என பூசாரிகள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

க.பரமத்தி கடைவீதியில் செல்லாண்டியம்மன் ஆலயத்தில் பூசாரிகள் முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை மாநில துணை தலைவர் கதிர்வேல் வரவேற்றார்.சங்க பொதுசெயலாளர் சதீஸ்கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது. கரூர் மாவட்டத்தில் கோ சாலை அமைப்பது, ஆலய ஆகம பயிற்சிகள் நடத்துவதெனவும், மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் மாதந்தோறும் திருவிளக்கு பூஜை, கோ பூஜை மற்றும் சங்கு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்துவது உள்ளி–்ட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து சமய அறநிலைத்துறையால் நடத்தப்படும் ஆலய வழிபாட்டு பயிற்சி முகாமிற்கு அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோயில் பூசாரிகளுக்கு வாய்ப்பு அளிக்குமாறு அரசை கேட்டுகொள்வது என பூசாரிகள் முன்னேற்ற சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>