அரவக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

அரவக்குறிச்சி, ஜன 13:அரவக்குறிச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசின் சார்பில் அரிசி, வெல்லம், நெய், பாமாயில், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரவக்குறிச்சி பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு வாரிய அஞ்சல் அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற அரசு ஆவணங்களை சரிபார்த்து, அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அதிகாரிகள் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர்.

Related Stories:

>