×

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் 138 பேர் கைது

திருவண்ணாமலை, ஜன.13: திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்தாண்டில் மட்டும் குற்றங்களில் ஈடுபட்ட 138 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை, எரிசாராயம் கடத்தல், கஞ்சா விற்பனை மற்றும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அதன்படி, கடந்தாண்டில் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 138 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், பெரும்பாலானவர்கள் சாராய வழக்கில் தொடர்புடையவர்கள்.
கடந்த 2018ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 2019ம் ஆண்டு 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 138 ஆக அதிகரித்தது. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில், மாநிலளவில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் இருகிறது. மேலும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, குறிப்பிட்ட தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Thiruvannamalai district ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல்...