×

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா?…அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா?…அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆனால், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், மாமதுரைக்கு தேவை வள்ளர்ச்சி அரசியலா அல்லது……. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில்;

* மெட்ரோ இரயில்,

* AIIMS,

* புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்!

இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது! இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Madura ,Chief Minister ,Mu. K. Stalin ,Madurai ,K. Stalin ,Murugapperuman ,1st Corps House ,Thirupparangundaram ,Thirupparangunram Murugan Temple ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம்: போராட்டம்...