500 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் திருவண்ணாமலை நகராட்சியில்

திருவண்ணாமலை, ஜன.13: திருவண்ணாமலை நகரில் தடைசெய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று நகராட்சி ஆணையர் மகேந்திரன் தலைமையில் அதிகாரிகள் மாட வீதி, தேரடி வீதி, சின்னக்கடை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தடைசெய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு ₹28 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டு அதிகாரிகள் வசூலித்தனர்.

Related Stories:

>