திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நூலக கட்டிடம் கட்டப்படும் முன்னாள் பேரூராட்சி தலைவர் பேச்சு கண்ணமங்கலத்தில் திமுக மக்கள் சபை கூட்டம்

கண்ணமங்கலம், ஜன.13: கண்ணமங்கலம் பெருமாள் கோயில் வளாகத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற திமுக மக்கள் சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ தயாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளை கணேசன், தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி அமைப்பாளர் விஜய் அமிர்தராஜ் வரவேற்றார்.

அப்போது முன்னாள் பேரூராட்சி தலைவரும், பேரூர் நகர செயலாளருமான கோவர்த்தனன் பேசுகையில், ‘பொதுமக்களின் பாதுகாப்புக்காக காவல் துறையினருடன் இணைந்து நகரம் முழுவதும் திமுக சார்பில் 31 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்ணமங்கலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நூலக கட்டிடம் கட்டித்தரப்படும் என கூறினார். இதில் திமுக பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>