கோவில்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு

கோவில்பட்டி, ஜன. 13: கோவில்பட்டி அரசு கல்லூரி, யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கேற்றி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திரசேகரன், தங்கமாரியம்மாள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, துணை தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மாணவரணி செயலாளர் விநாயகா முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் துறையூர் கணேஷ் பாண்டியன் மற்றும் பாபு, ஆபிராகம் அய்யாத்துரை, அருணாசலசாமி, போடுசாமி, ஆர்டிஓ விஜயா, தாசில்தார் மணிகண்டன், பிடிஓக்கள் சசிகுமார், ஐகோர்ட்ராஜா, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் தனவதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமா சங்கர், கூட்டுறவு வங்கி தலைவர், மகேஷ், பாபு பங்கேற்றனர். தூத்துக்குடி யூனியன் அலுவலகத்திலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Related Stories:

>