பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி, ஜன. 13: கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியில் கஞ்சா விற்ற சின்னராஜ் (32), கிருஷ்ணன் மகன் ராம்குமார்(21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் சின்னராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கலெக்டர் செந்தில்ராஜூக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில் சின்னராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை இன்ஸ்பெக்டர் அய்யப்பன் பாளை மத்திய சிறையில் வழங்கினார்.

Related Stories:

>