மெர்க்கன்டைல் வங்கி சார்பில் தூத்துக்குடியில் பொங்கல் விழா

தூத்துக்குடி, ஜன. 13: தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. விழாவில், வங்கியின் துணைத்தலைவர், பொதுமேலாளர், துணை பொதுமேலாளர்கள், உதவி பொதுமேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். வங்கியின் பெண் அலுவலர்கள் இணைந்து அழகிய வண்ணக் கோலங்களிட்டு இருந்தனர். தொடர்ந்து பாரம்பரிய முறையில்  பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Related Stories:

>