கோவில்பட்டியில் 3டி வசதிகளுடன் 2 அடுக்கு சத்யபாமா தியேட்டர் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அதிநவீன வசதிகள் கொண்ட சத்யபாமா தியேட்டர் திறப்பு விழா நடந்தது. கீழ், மேல் என 2 அடுக்குடன் இந்த தியேட்டர் 3டி வசதியுடன் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்டது. திறப்பு விழாவிற்கு மதுரை உயர்நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். தியேட்டர் நிர்வாகிகள் ராஜகுரு, சுந்தராஜா, ஆனந்தராஜா முன்னிலை வகித்தனர். தியேட்டர் நிர்வாகி சவுந்தராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, தியேட்டரை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இன்று (13ம்தேதி) திறப்பு விழாவை முன்னிட்டு 2தியேட்டரிலும் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும், நாளை (14ம்தேதி) பொங்கல் முதல் மேல் தியேட்டரில் மாஸ்டர் திரைப்படமும், கீழ் தியேட்டரில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் திரையிடப்படுகிறது.

விழாவில் ரீஜண்ட் ஜவுளிகடை உரிமையாளர் அரிபாலன், டாக்டர் லதா வெங்கடேஷ், ஜெயச்சந்திரா ராஜகுரு, ஆர்டிஓ விஜயா, தாசில்தார் மணிகண்டன், ஆணையாளர் ராஜாராம், பொறியாளர் கோவிந்தராஜ், வெங்கடேஷ் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் வெங்கடேஷ், கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன், நகர செயலாளர் விஜயபாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், யூனியன் சேர்மன் கஸ்தூரி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் அனிதா, தியேட்டர் மேலாளர் சக்தி மற்றும் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தியேட்டர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>