அம்பை சமத்துவ பொங்கல் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி

அம்பை, ஜன.13:  சென்னை அஜய் சேதுபதியார் அறக்கட்டளை சார்பில் அம்பையில்  நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு இலவச வேஷ்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்குத் தலைமை வகித்த அஜய் சேதுபதியார் அறக்கட்டளை அறங்காவலர் அஜய் படையப்பன் சேதுபதியார், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசாக இலவச வேஷ்டி, சேலை, சட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவிற்கு அம்பை முகைதீன் ஜூம்மா பள்ளி தலைமை இமாம் பீர்முகமது ஆலிம், கிறிஸ்தவ மத போதகர் கிங்ஸ் ஹேமில்டன் சாமுவேல், அம்பை வக்கீல்கள் சங்கத்தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தனர்.  முகைதீன் ஜூம்மா பள்ளி தலைவரான வக்கீல் சாகுல்ஹமீது மீரான் வரவேற்றார்.

 விழாவில் சிவகங்கை தொழிலதிபர் சுரேஷ், மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் துரை பாண்டியன், வள்ளிமயில் வேம்பு, பண்ணை சந்திரசேகரன், வக்கீல்கள் காஜா மைதீன், சாமிநாதன், ஹரிஹரசுதன், உமர்பாரூக், அப்துல்ஹமீது, முகமது வாழ்த்திப் பேசினர். அப்பலோ மக்தூம் நாசர் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை சென்னை அஜய் சேதுபதியார் அறக்கட்டளையினர் செய்திருந்தனர். இதனிடையே அறக்கட்டளை சார்பில் விகேபுரத்தில் இன்று நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவிலும் 10 ஆயிரம் பேருக்கு வேஷ்டி, சேலை வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>