×

வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்

நெல்லை, ஜன. 13:  வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வளாக  நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த அப்பலோ டயர்ஸ் கம்பெனி, ரானே மெட்ராஸ் நிறுவனம் சார்பில்  வளாக நேர்காணல் நடந்தது.  சென்னையைச் சேர்ந்த அப்பலோ டயர்ஸ் கம்பெனி மனித வளத்துறை அலுவலர்கள் நாராயன் தேவராஜ், குகன்நாதன் , ஹரி மற்றும் ரானே மெட்ராஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை அலுவலர்கள் கிருஷ்ணழூர்த்தி, மாதவன் உள்ளிட்டோர்  எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தினர்.

 இதில் மெக்கானிக், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள்  ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் தேர்வான 90 சதவீத மாணவர்களை எஸ். தங்கப்பழம் கல்விக்குழும நிறுவனர் தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன், கல்லூரி முதல்வர் ஆனந்தகுமார் ஆகியோர் பாராட்டி பணி நியமன ஆணைகளை வழங்கினர்.  ஏற்பாடுகளை அனைத்துத் துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Vasudevanallur Thangappalam Polytechnic College ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...