×

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

பணகுடி, ஜன. 13:  பணகுடி அருகே சிவசுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி மகன் ஸ்ரீராம் (22). எலக்ட்ரீசியனான இவர், லெப்பை குடியிருப்பில் பெருமாள்  என்பவரது வீட்டில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வேலை செய்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இவரது மீது  மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்ட இவரை வடக்கன் குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED விஷம் குடித்து தொழிலாளி பலி