மது குடித்தவர் பரிதாப சாவு வாயில் ரத்தம் வழிந்தபடி சடலம் மீட்பு

வேட்டவலம், ஜன.12: வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் டாஸ்மாக் கடை அருகே வாயில் ரத்தம் வழிந்தபடி ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா எடப்பட்டு கிராமத்தை சேர்ந்த மஜீத்(48), மாட்டுத்தரகர் என்பதும், இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த தளவாய்குளத்தில் நடந்த கால்நடை சந்தைக்கு வியாபாரத்திற்காக வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மஜீத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மஜீத்தின் மனைவி சாராம்பி(45) வேட்டவலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் எஸ்ஐ தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் அதிகளவு மது குடித்ததால் இறந்தததாக தெரிய வந்துள்ளது. இறந்த மாட்டுத்தரகர் மஜீத்துக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

Related Stories:

>