செட்டிமாங்குறிச்சியில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் டி.எம். செல்வகணபதி பங்கேற்பு

இடைப்பாடி, ஜன.12: இடைப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சியில், திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி தலைமை வகித்து பேசினார்.

இடைப்பாடி ஒன்றிய செயலாளர் நல்லதம்பி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் எடப்பாடி முருகேசன், ஜலகண்டாபுரம் காசி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், திருநாவுக்கரசு, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அழகுதுரை, குப்புசாமி, பூவா கவுண்டர், பேரூர் செயலாளர் பழனிச்சாமி, இடைப்பாடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்தமிழ்செல்வன், வீரபாண்டியார் நற்பணி மன்ற தலைவர் கரிகாலன், மகளிர் அணி ஒன்றிய அமைப்பாளர் சாந்தி ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து டி.எம். செல்வகணபதி திமுகவின் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாகவும், கடை கடையாக 500க்கும் மேற்பட்ட இடங்களில் வழங்கினர்.

Related Stories:

>