பொங்கல் பரிசு வழங்கக்கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்

மேட்டூர், ஜன.12: தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் பாதையோர வியாபாரிகள் உள்ளிட்ட 18 வகையான முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்புகளை வழங்க கோரி நேற்று மேட்டூர் தாசில்தார் அலுவலகம் எதிரே சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>