நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு அரசுக்கு கோரிக்கை

திருச்செங்கோடு, ஜன.12: திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,  ஊழியர்களுக்கான பேரவை கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை  வகித்தார். கட்டுமானத் தொழிலாளர்கள்  மட்டுமின்றி, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து  தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். கட்டுமான  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், இலவச வேட்டி சேலை  தரப்படவில்லை. இலவச வேட்டி சேலை வாங்க மற்றொரு நாளில் வருமாறு கூறியுள்ளனர். சுமார் ₹300 பெறுமான பரிசுத்தொகுப்பு வாங்க, தொழிலாளர்கள் 2 நாள் ஊதியத்தை விட்டு விட்டு திருச்செங்கோடு செல்ல வேண்டி உள்ளது.  இதேபோல், தொழிலாளர்களை அலைக்கழிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்சுரேஷ்  வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் கந்தசாமி,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, ஒன்றியக்குழு  உறுப்பினர்கள்  சுந்தரம், சக்திவேல், குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>