தளியில் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை பேரணிசெல்லக்குமார் எம்பி பங்கேற்பு

தேன்கனிக்கோட்டை, ஜன.12: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தளியில் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மாநில செயலாளர் தேன்கு.அன்வர் தலைமை வகித்தார்.

மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், வீரமுனிராஜ், பொதுக்குழு உறுப்பினர் காசிலிங்கம், கேசவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி தலைவர் அப்துல் ரஹ்மான் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் நடராஜ், துணைத்தலைவர் சபியுல்லா, பொருளாளர் மகாதேவன், வட்டார தலைவர்கள் கேசவரெட்டி, பார்த்திபன், மாது, செட்டிப்பள்ளி ஊராட்சி தலைவர் சங்கர், இளைஞரணி இதயத்துல்லா, நகர தலைவர்கள் கோபி, வெங்கடேஷ், மகளிரணி சரோஜா, பர்கத், வரதராஜ், முனிசாமிரெட்டி, பியோரேஜான் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக செல்லக்குமார் எம்பி தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பேரணிணை துவக்கி வைத்தார். தளி பஸ் நிலையம் வரை ஏர்கலப்பை பேரணி நடைபெற்றது. தளி இம்ரான்கான் தலைமையில் மாற்றுகட்சியிலிருந்து விலகிய பலர் காங்கிரசில் இணைந்தனர். தாஸ் நன்றி கூறினார்.

Related Stories:

>