பொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளியில் சிறப்பு வாரச்சந்தை தண்டோரா போட்டு அறிவிப்பு

போச்சம்பள்ளி, ஜன.12: பொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளியில் நாளை சிறப்பு வாரச்சந்தை கூடுவதாக தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலே 2வது பெரிய சந்தையாக போச்சம்பள்ளி வாரச்சந்தை உள்ளது.வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்வது வழக்கம். நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதேபோல், மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளை அலங்கரிக்கும் அலங்கார பொருட்கள் என சந்தையில் விற்பனை களைகட்டியது. பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் மட்டும் ₹5 கோடிக்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை 14ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி அதற்கு முதல் நாளான 13ம் தேதி(நாளை) சிறப்பு வாரச்சந்தை நடக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. சந்தை மீண்டும் நடைபெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: