அரூர் சந்தையில் கயிறு, பானை வியாபாரம் மந்தம்

அரூர்,ஜன.12:   பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது.  மாட்டுப்பொங்கல் அன்று கால்நடைகளுக்கு பல வண்ண கயிறு, மணிகளை  புதுப்பிப்பது வழக்கமாகும். மேலும் பொங்கல் பண்டிகையை எதிர் நோக்கி  தயாரித்த மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அரூர்  சந்தையில் மாடுகளுக்கான பல வண்ண கயிறுகள், மணிகள், அரை கிலோ முதல் 5கிலோ  வரை பொங்கல் வைக்க தேவையான மண்பானைகள் குவிக்கப்பட்டு இருந்தது. காலை முதலே  சந்தையில் வியாபாரம் மந்தமாக இருந்தது. சொற்ப அளவில் விற்பனையானது. ஜவுளி  கடைகளில் ஓரளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது. வியாபாரமும் நடந்தது.  இதனால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

Related Stories: