சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை விநாயகபுரம் 10வது தெருவை சேர்ந்த ஆதாம்ஷாவுக்கும் (28), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நேற்று காசிமேடு எஸ்என் செட்டி தெருவில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற  உள்ளதாக, குழந்தைகள் நல அமைப்பிற்கு புகார் வந்தது. அதன்பேரில், குழந்தைகள் நல அமைப்பின் அதிகாரி அனுசுயா தலைமையில் அதிகாரிகள் நேற்று அதிகாலை மேற்கண்ட திருமண மண்டபத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், 17  வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது. உடனடியாக திருமணத்தை நிறுத்தி, காசிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரித்தபோது, சிறுமியின் குடும்ப வறுமையை பயன்படுத்தி  திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆதம் ஷாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். சிறுமியை குழந்தைகள் நல அமைப்பினர் மீட்டனர்.

Related Stories:

>