மனைவிக்கு கத்திக்குத்து போதை கணவன் கைது

ஆவடி: மனைவியை குடிபோதையில் கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.   ஆவடி காமராஜர் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் குமார்(48). பெயின்டர். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி கலா(42). இவர்களுக்கு 4  மகள்கள் உள்ளனர். குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கலாவிடம் குடிபோதையில் தகராறு செய்து அடித்து உதைப்பது வழக்கம் என கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று முன்தினம் வேலை முடிந்து நள்ளிரவில் போதையில்  குமார் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை கலா, தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், கத்தியை எடுத்து கலாவின் இடுப்பில் குத்தியுள்ளார். கலா, ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சரிந்தார். கலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு  ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு கலாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான போலீசார் நேற்று குமாரை கைது  செய்தனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>