நாகர்கோவிலில் பெற்றோர், அண்ணனை கத்தியால் குத்திவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்ெகாலை செய்த வாலிபர் மீது கொலை முயற்சி வழக்கு

நாகர்கோவில், ஜன.12: நாகர்கோவில்  நேசமணிநகர் பார்க் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜெயதாஸ் (72). ஓய்வு பெற்ற  தலைமை ஆசிரியர். இவரது மனைவி ஷாலினி (52). இவர்களுக்கு ெஜய்சன் (29),  ஜேக்கப் (23) என்ற இரு மகன்கள் உண்டு. இதில் ஜெய்சன், பேராசிரியராக  உள்ளார். ஜேக்கப் எம்.சி.ஏ. முடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக மன  நலம் பாதிக்கப்பட்ட நிலையில், நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 8ம் தேதி,  கலெக்டர் அலுவலகம் வந்த ஜேக்கப், சொத்துக்காக  தனது தந்தையும், அண்ணனும்  சேர்ந்து விஷம் வைத்து தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாக கூறினார்.

இந்த  நிலையில் நேற்று முன் தினம் மதியம் பெற்றோர் மற்றும் அண்ணன் ஜெய்சன் (29)  ஆகியோருடன் தகராறு செய்து அவர்களை கத்தியால் குத்திய ஜேக்கப், வீட்டின்  மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார். கத்திக்குத்தில் காயம்  அடைந்த சாலினி, ஜெயதாஸ், ஜெய்சன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார்கள். சம்பவம் குறித்து நேசமணிநகர் இன்ஸ்பெக்டர்  சாய்லெட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது இந்த சம்பவம்  தொடர்பாக ஷாலினி அளித்த புகாரின் அடிப்படையில், ஜேக்கப் மீது கொலை முயற்சி  வழக்கு பதிவு செய்தனர்.

ஜேக்கப் கடந்த ஒரு வருடமாக தான் மனநலம்  பாதிப்புக்கு உள்ளாகி அவரது நடவடிக்கைகள் திசை மாறி சென்றதாக உறவினர்கள்  கூறினர். சில ஆண்டுகளுக்கு முன் வரை குடும்பத்தினர் மீது அதிக பாசம் வைத்து  இருந்த ஜேக்கப், நண்பர்களுடன் ஜாலியாக இருப்பார். நல்ல முறையில்  படித்தார். உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் திடீரென  தான் நடவடிக்கைகள் மாற தொடங்கின. கோபம் வந்து விட்டால் வீட்டில் உள்ள  பொருட்களை அடித்து நொறுக்குவார். வீட்டுக்கு யாராவது வந்தால், தன்னை கொலை  செய்ய வந்திருக்கிறார்கள் என கூறி கூச்சலிடுவார். அவ்வப்போது  சிகிச்சையின் போது நலமாகி விடுவார். ஜேக்கப்பை ஏதாவது மனநல காப்பகத்துக்கு  கொண்டு செல்லுங்கள் என கூறிய போதும், தனது மகன் சரியாகி விடுவான் என  ஜேக்கப்பின் பெற்றோர் கூறினர். ஆனால் இப்போது  அவன் உயிரை மாய்த்துக்  கொண்டான் என உறவினர்கள் சோகத்துடன் கூறினர். பிரேத பரிசோதனைக்கு பின்,  குடும்பத்தினரிடம் ஜேக்கப் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

>