திருச்சியில் விடிய விடிய தொடர் மழை பனி காலத்திலும் தொடர்கிறது மாவட்டம் முழுவதும் 109.30 மி.மீ., மழை பதிவு

திருச்சி, ஜன. 12: பனி காலத்திலும் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 109.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் புத்தாண்டு பிறந்ததில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வபோது மழை தூறலும், மழை சாரலும் சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை வரை மழையளவு (மில்லி மீட்டரில்) பதிவான விவரம் வருமாறு: கல்லக்குடி 6.30, லால்குடி 4.40, நந்தியாறு தலைப்பு 4.60, புள்ளம்பாடி 5.20, தேவிமங்கலம் 4, சமயபுரம் 15.20, சிறுகுடி 4.20, வாத்தலை அணைக்கட்டு 2.60, மணப்பாறை 4.60, பொன்னணியாறு 3.60, கோவில்பட்டி 4.20, முசிறி 2, புலிவலம் 5, நவலூர் குட்டப்பட்டு 4.80, துவாக்குடி 2, கொப்பம்பட்டி 2, தென்பறநாடு 4, துறையூர் 1, பொன்மலை 6, திருச்சி ஏர்போர்ட் 4.60, திருச்சி ஜங்ஷன் 5, திருச்சி டவுன் 14 என மாவட்டம் முழுவதும் 109.30 என பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 4.37 பதிவானது. தொடர் மழை காரணமாக சாலைகளில் குளம்போல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் சாலைகளில் ஈரம் காயாமல் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பனி பெய்யும் காலத்திலும் மழை பெய்து வருகிறது.

Related Stories:

>