அஞ்சல் துறை எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன. 12: அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தமிழ் புறக்கணிப்பு கண்டித்து திருச்சியில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தமிழை புறக்கணித்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், தமிழில் தேர்வு நடத்த வலியுறுத்தியும் திருச்சி தலைமை தபால் நிலையம் முன் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர மாவட்ட செயலாளர் லெனின் தலைமை வகித்தார். இதில் பலர் பங்கேற்று அஞ்சல் துறை விண்ணப்ப நகலை எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

தேவைப்பட்டால் கூடுதல் பஸ்கள்

திருச்சி கோட்டத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்களுக்காக 440 பஸ்கள், திருச்சி, கோவை, கரூர், நாகை உள்ளிட்ட வெளியூர்களுக்கு 496 பஸ்கள் என 936 பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது வெளியூர்களில் இருந்து கூடுதலாக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை ஏற்ப தற்போது இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக தேவைப்பட்டால் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

>