3 பைக்குகள் பறிமுதல் கொடி கம்பம் உடைப்பு திருவெறும்பூர் டிஎஸ்பியிடம் பாஜகவினர் புகார் மனு

திருவெறும்பூர், ஜன. 12: திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூரில் பாஜ சார்பில் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொடிக்கம்பத்தை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரிடம் பாஜகவினர் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த புகாரை அலட்சியப்படுத்தி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேசியதால் பாஜகவினர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், திருவெறும்பூர் மண்டல் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத்தலைவர் இந்திரன், புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார் உட்பட 15க்கும் மேற்பட்டோர் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் பாஜக கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அலட்சியமாக நடந்து கொண்ட நவல்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்வமுடன் வாங்கும் மக்கள் இன்று மின்தடை (காலை 9.45 மணி முதல் 4 மணி வரை)

மணப்பாறை துணை மின் நிலைய பகுதி: மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, மில் பழைய காலனி. மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, ராயம்பட்டி, வலையபட்டி, எப்.கீழையூர், சின்னமணப்பட்டி, பெரியபட்டி, களத்துப்பட்டி, கொட்டப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம்பூசாரிபட்டி, கரும்புலிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், மேட்டுப்பட்டி, கோவில்பட்டி, இரட்டியபட்டி, தாதனூர், வளநாடு கைகாட்டி, தொட்டியபட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, கவுண்டம்பட்டி, பளுவஞ்சி, ஊத்துக்குளி, வேம்பனூர், வலசுப்பட்டி ஆகிய பகுதிகள்.

Related Stories: