×

கர்நாடகாவுடன் டி20 தமிழ்நாடு தோல்வி

 

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதின. முதலில் ஆடிய கர்நாடகா அணியை சேர்ந்த தேவ்தத் படிக்கல், ரன் மெஷினாக மாறி, 46 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 102 ரன் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன் குவித்தது. பின், 246 ரன் இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி வீரர்கள் கர்நாடகா அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வருவதும் போவதுமாக இருந்தனர். 14.2 ஓவரில் தமிழ்நாடு 100 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதனால் 145 ரன் வித்தியாசத்தில் கர்நாடகா, இமாலய வெற்றியை பதிவு செய்தது.

Tags : T20 Tamil Nadu ,Karnataka ,Ahmedabad ,Tamil Nadu ,Devdat Padtikal ,
× RELATED 100ல் 100 ரன் மிஷின் சாதிப்பாரா?