பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்பு விற்பனை மும்முரம்

பெரம்பலூர்,ஜன.12:பெரம்பலூர் நகரில் மலைபோல் குவிக்கப்பட்ட செங்கரும்பு, .பொங்கல் பண்டி கைக்கான விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறு நாள் தொடங்கி கோலாக லமாகக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முக்கியத் தேவை யான மண்பானைகள், சில்வர் பாத்திரங்கள், செங்கரும்பு, மஞ்சள் மற்றும் படை யலுக்கு தேவையான வாழைப்பழம் போன்றவற்றை வாங்குவதற்காக மாவட்டத் தலைநகராக உள்ள பெரம்பலூருக்கு சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று முதலே படையெடுக்க தொடங்கியுள்ளனர். இவர்களின் வருகையை எதிர்பார்த்து செங் கரும்பு வியாபாரிகள் பெரம்பலூர் நகரின் பிரதான சாலையான என்எஸ்பி சா லையின் தென்புறத்தை முழுமையாக ஆக்கிரமித்து அடைத்தபடி செங்கரும்பு களைக் குவித்து வைத்து கூவிக்கூவி தங்களது விற்பனையைத் தொடங்கியுள் ளனர். குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், வி. கைகாட்டி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட செங்கரு ம்புகள் சாலையின் சென்டர் மீடியனில் சாய்த்து வை க்கப்பட்டு ஜோடி 40ரூபாய் க்கும், ஒரு கட்டு 400 ரூபா ய்க்கும் விற்கப்பட்டு வருகி றது. இது 11,12,13,14 ஆகிய தேதிகளில் ஏறுமுகத்தில் சென்று, கட்டு 600 ரூபாய் வரை விற்கப்படும் என எதி ர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட் டுள்ள கிழங்குடன் கூடிய மஞ்சள் தோகைகள் ஜோடி 40க்கு விற்கப்பட்டு வருகி றது.குளித்தலை,முசிறி பகு தியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள வாழைத்தார் கள் ரூ500 முதல் ஆயிரம் வரை விலை வைத்து விற் கப்படுகிறது.திருமணமான முதலாமாண்டு பெண் ணிற்கு, பிறந்த வீட்டிலிரு ந்து பொங்கல் சீர்வரிசை கொண்டு செல்ல இருப்ப தால் பொங்கல் சமைப்பத ற்கான மண்பானைகள் சாலையோரங்களில் வண் ணம் தீட்டப்பட்டு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட் டுள்ளன. வாகனபோக்குவரத்துநெரி சலை கட்டுப்படுத்த பெரம் பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின் பே ரில் போக்குவரத்து போலீ சார் நகரில் சாலை போக்கு வரத்து சீரமைப்புப் பணிக ளைத் தீவிரமாக மேற்கொ ண்டு வருகின்றனர். குறிப் பாக பழைய பஸ்டாண்டு என்எஸ்பி சாலை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

Related Stories: