ெசன்டர்மீடியனில் உள்ள தடுப்பு அகற்ற கோரி செங்குணம் கிராம மக்கள் சாலை மறியல்

பெரம்பலூர்,ஜன.12:பெரம் பலூர் அருகே செங்குணம் கிராம மக்கள் நேற்று இரவு சாலை தேசிய நெடுஞ்சா லையில் மறியலில் ஈடுபட்டனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டபொதுமக்கள் வசித்து வருகின்றனர்.செங்குணம் பிரிவு சாலை பகுதியில் சென்டர் மீடியன் திறப்பு வழித்தடம் ஏகனவே பயன்பாட்டில் இருந்தது. அப்பகுதியில் சாலைவிபத்து அதிகளவில் ஏற்பட்டதால் அந்த சென்டர் மீடியன் மூடப்பட்டது. இதையடுத்து செங்குண கிராமமக்கள் பெரம்பலூர் செல்ல வேண்டுமென்றாலும், மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்றாலும் மூன்று கிலோ மீட் டர் தூரம் சுற்றிச் சென்று எளம்பலூர் தண்ணீர் பந்தல் வழியாக வந்து வளைந்து வந்து செல்ல வேண்டும்.

இதனால் காலவிரயமும், போக்குவரத்து செலவும் ஏற்பட்டுவருகிறது. இதனால் செங்குணம் கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள பாலத்தினடியில் ஒடை நீர் செல்லும் பாதையை தங்கள் வழித்தடமாகப் பயன்படுத்தி வந்தனர். தற்போது பாலத்தின் கீழ் தண்ணீர் நிற்பதாலும், அந்தப் பகுதியில் சேறும் சகதியுமாக உள்ளதாலும் போக்குவரத்து வசதியின்றி செங் குணம் கிராமமக்கள் தவித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் செங்குணம் பிரிவு சாலை பகுதியில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் உள்ள தடுப்பினை அகற்றி போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி நேற்று இரவு அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அப்பகு தி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதி க்கப்பட்டது.

Related Stories: