திருமுல்லைவாசலில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

சீர்காழி, ஜன.12: சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் மீனவ இளைஞர்கள் நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் துவக்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. முன்னதாக அணி கொண்ட கோதையம்மன் சமேத முல்லைவனநாதர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். பின்பு பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார் அப்போது மீனவ பஞ்சாயத்தார்கள் நாட்டாமைகள் உடனிருந்தனர்.

Related Stories:

>