கரூர் லைட்ஹவுஸ் கார்னர் வளைவு பாதையில் வாகனங்கள் நிறுத்துவதால் ேபாக்குவரத்து பாதிப்பு

கரூர், ஜன. 12: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் வளைவு பாதையில் வாகன நிறுத்தம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கரூர் பேரூந்து நிலையத்தில் இருந்து திருச்சி போன்ற பகுதிகளுக்கும், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் வாகனங்கள் அனைத்தும் லைட்ஹவுஸ் கார்னர் வழியாக வந்து, அமராவதி ஆற்றுப்பாலத்தை கடந்து சென்று வருகிறது. லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் ரவுண்டானா பயன்பாட்டில் உள்ளது. இந்த ரவுண்டானாவை சுற்றித்தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில், வளைவு பாதையோரம் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களில் பல நீண்ட நேரம் வளைவு பாதையோரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது வாகன விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த பகுதியில் நீண்ட நேரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணித்து தேவையான சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை கண்காணித்து, வாகன நிறுத்தத்திற்கு தீர்வு காண வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>