வாகன ஓட்டிகள் கோரிக்கை இருதய சிகிச்சைக்கு 2 மாத குழந்தையை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் செல்ல பேரிகார்டு அகற்றம்

கரூர், ஜன. 12: தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு குழந்தையின் சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல வழிவிடும் வகையில் கரூர் மாவட்ட காவல்துறையினர் உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த இரண்டு மாத குழந்தை ஒன்றுக்கு கோவை தனியார் மருத்துவமனையில் அவசர இருதய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என நேற்று முன்தினம் மருத்துவர்கள் குழந்தையின் உறவினர்களிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது இதனையடுத்து, கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, நேற்று அதிகாலை ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனைக்கு குழந்தை மற்றும் சில உறவினர்களை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் விரைவாக செல்ல வேண்டும் எனவும் ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த ஆம்புலன்ஸ் திருச்சி மாவட்ட பகுதியை தாண்டி குளித்தலை நோக்கி வந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் இருந்து கோவை மாவட்ட எல்லையான தென்னிலை வரை இரண்டு இடங்களில் சாலையின் மையத்தில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குளித்தலை மருதூர் பகுதியில் உள்ள பேரிகார்டு பகுதியை நேற்று காலை 7,30மணியளவில் தாண்டிய அந்த ஆம்புலன்ஸ் கரூர் கோவை சாலையில் விரைந்து சென்றது.

அப்போது, கரூர் எல்லையான தென்னிலையிலும் சாலையின் மையப்பகுதியில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ள தகவல் கேள்விபட்ட, ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் வாகன டிரைவர் மூலம் கரூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்கு நேற்று காலை 7.40மணியளவில் தொடர்பு கொண்டு, தென்னிலை பகுதியில் உள்ள பேரிகார்டு ஆம்புலன்ஸ் கடக்கும் வரை அகற்ற உதவிட வேண்டும் என நிலையை விளக்கி உதவி கேட்டுள்ளனர்.

இதனடிப்படையில், தென்னிலை சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு அந்த பகுதியில் உள்ள போலீசார் மூலம் விரைந்து அகற்றப்பட்டது. அதன்பிறகு, 8.10மணியளவில் எந்தவித தடையும் இன்றி ஆம்புலன்ஸ் தென்னிலை பகுதியை தாண்டி கோவையை நோக்கிச் அதிக விரைவாக சென்றது. சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று மிக மிக அதிக வேகத்தில் நேற்று காலை கரூர் கோவை சாலையில் பயணித்ததை அனைத்து தரப்பினர்களும் ஆச்சரியத்துடனும், வியப்புடனும் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: